திருகோணமலையில் லோகவர்த்தினி என்ற இளம் பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை அவர் முன்னெடுத்து வருகிறார்.
தனது கடைக்கு அருகில் இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தார். ஏன் என்று கேட்டபோது போதிய பணம் இன்மையால் உணவு வாங்க வசதியில்லை என்றும் சரியான பசியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த நிலையில் அவருக்கு உணவு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பசி என்று வருபவருக்கு தனது கடையில் உணவு உண்டு என பதாதை ஒன்று எழுதி வைத்துள்ளர்.
சிங்கள மொழியிலும் அவ்வாறு பதாகை வைத்துள்ளமை சிறம்பசமாகும். தனது கடைக்கும் வரும் மாற்றுத்திறனாளிகள், யாசகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.
இவரின் செயற்பாட்டை பலர் கடவுளுக்கு இணையாக தெரிவித்து முகநூல் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.