இலங்கையில் சேவை செய்யும் சீன நாட்டவர்களுள் 3,300 பேருக்கு தற்பொது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி முதல் 25 வரையான காலப்பகுதியில் இவ்வாறு சீன நாட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் சேவையாற்றும் சீனர்களுக்கே இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.