இலங்கையில் சீனத்தடுப்பூசி பெற்ற 50ற்கும் மேற்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதியிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு இவ்வாறு சைனோபார்ம் தடுப்பூசி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தலைசுற்று மற்றும் தலைவலி ஏற்பட்ட 50ற்கும் அதிகமானவர்கள் வீரகெட்டிய மருத்துவமனையில் நேற்று மாலை சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.