நுவரெலியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹனவிடகே டொன் நந்தசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது மனைவியுடன் நுவரெலியா பகுதியில் தலைமறைவாக இருந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் தீவுக்குத் திரும்புவதற்கு முன்பு சிறிது காலம் இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாக நம்பப்படுகிறது.