களுத்துறை மாவட்டம் – மொரந்துடுவ, பொல்ஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் நீண்டதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் சந்தேக நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மொரந்துடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.