இலங்கையில் கொரோனா பரவல் தீவிரத்தை குறைக்க அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களை மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16 ஆம் திகதியின் பின் கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களை நீக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் சுகாதார சட்டங்களுக்கமைய செயல்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மக்கள் சுகாதார சட்டங்களை சரியான முறையில் செயற்பட்டால் நாட்டில் கொரோனா தொற்று நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையான ஒழித்து விட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.