இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் கொரோனாத் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண வைபவங்கள் நடக்காத காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வருடம் ஒன்றிற்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் வரையில் குழந்தை பிறப்புக்கள் இடம்பெறும் நிலையில், கொரோனாத் தொற்று நிலைமையால் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது” – என்றார்.
இதேவேளை, கொரோனாத் தொற்றுக் காலப்பகுதியில் கருத்தரிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் கடந்த சில மாதங்களில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.