நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த நபர்கள் இருவரும் 27 ஆம் திகதி உயிரிழந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட ஆண் ஒருவரும், 60 வயதிற்கும் மேற்பட்ட பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 671,051 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.