இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி மக்கள் நாளுக்கு நாள் தவித்து வருகின்றனர்.
இதேவேளை எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி மற்றும் உணவு பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே செல்கின்றது.
இதனால் தற்போது நாட்டில் உணவு தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு கப் தேநீர் மற்றும் ஒரு பராட்டா 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போதைய நெருக்கடி நிலை நீடித்தால் மேலும் பல இன்னல்களுக்கு பொதுமக்கள் முகம்கொடும் நிலை ஏற்படலாம்.