எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumith Wijesinghe) தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டிய புதிய விலைகளைக் குறிப்பிட்டு மீண்டும் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு (Udaya Gammanpila) அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
லங்கா I.O.C அண்மையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அண்மையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.