நாட்டில் நாளை 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையான மின்வெட்டு பட்டியலை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.