கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் “ஆர்ப்பாட்ட எச்சரிக்கை” ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மே 1, 2022 கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.