நாட்டில் அண்மைக் காலமாக நிலவும் வறட்சியான காலநிலையால் சந்தையில் இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இளநீரின் தேவையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இளநீர் ஒன்றின் மொத்த விலை 100 முதல் 140 ரூபா வரை உள்ளதாகவும் சில இடங்களில் 250 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இலங்கை இளநீருக்கு சர்வதே சந்தையில் காணப்படும் கேள்விக்கு அமைய இளநீர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு ஏற்கனேவே தெரிவித்திருந்தது.
இலங்கையில் 85 இளநீர் உற்பத்தி கிராமங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.