இலங்கைக்கு வருகை தந்துள்ள இரு கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்தியை முன்னிட்ட நிகழ்வுகளுக்காக கனடாவில் இருந்து வருகைதந்திருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி உருவாக்கப்பட்டு 150 ஆண்டை நிறைவுசெய்யும் முகமாக பல நிகழ்ச்சிகள் மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றன.
குறித்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பழைய மாணவர்கள் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் கனடா நாட்டில் இருந்து குறித்த நிகழ்வுக்கு வந்தவர்கள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.