தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொல்கொல்ல நீர் வழங்கல் திட்டத்தின் நயாவல பாலத்திற்கு அருகில் அத்தியாவசிய விஸ்தரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், இன்றைய தினம் (13-07-2023) வியாழக்கிழமை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான 6 மணித்தியால நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி, உடதலவின்ன, பல்லெதலவின்ன, சரசவி மாவத்தை, பொல்கொல்ல, நவயாலதென்ன மற்றும் ஜம்புகஹபிட்டிய ஆகிய பகுதிகள் நீர் விநியோத் தடையினால் பாதிக்கப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.