இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
பொரளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர் அறுபது வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த நபர் தனது காருக்கு எரிபொருள் எடுக்க வந்தபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இவ்வாறு எரிபொருள் வரிசையில் காத்திருப்பவர்கள் உயிரிழந்து வருகின்றமை மக்களிடையே பெரும் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.