இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்த ஆணையாளரின் அதிருப்தியை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை பிரித்தானியா தொடர்ச்சியாக வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (நன்றி கேசரி)
இலங்கையில் அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
No Comments1 Min Read
