இலங்கையில் 74வது சுதந்திர தினம் இன்று (04-02-2022) கொண்டாடப்படவுள்ள நிலையில் கூகுள் நிறுவனம் (Google) இலங்கையின் தேசிய கொடியினை தனது அட்டை படத்தில் வெளியிட்டு தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய இடங்களான கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், குறித்த விசேட பாதுகாப்புத் திட்டத்திற்கு இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் உதவியுடனும் 3,000 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இலங்கையின் 74 வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு இன்றைய தினம் (04-02-2022) 21 வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அந்த பாதைகளுக்குரிய மாற்றுப் பாதைகளை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.