இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற இளநீருக்கு வெளிநாடுகளில் அதிக கேள்வி நிலவி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இளநீரை ஏற்றுமதி செய்யும் நோக்கில் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வீரகெடிய பகுதியில் அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.