நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (08.11.2023) பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவுபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்குமற்றும்கிழக்குமாகாணங்களில்காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவாமாகாணங்களில் சிலஇடங்களில்காலை வேளையில் பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.