பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிக கொடூரமான முறையில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் உலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் உணர்வுகளை பாகிஸ்தான் மக்கள் பகிர்ந்துகொள்கின்றனர் என அந் நாட்டின் பத்திரிகையாளர் வஹாப் ஜட்எக்ஸ் கூறியுள்ளார்.
அதோடு இஸ்லாமிய மதத்தில் இவ்வாறான கொலைகளிற்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் அவர் பதிவில்,
அன்பான இலங்கையர்களே உங்களின் துயரம் ஏமாற்றம் விரக்தி உட்பட அனைத்து உணர்வுகளையும் நாங்கள் தற்போது பகிர்ந்துகொள்கின்றோம்- உணர்கின்றோம். நாங்கள் தற்போது மிகவும் துன்பகரமான தருணத்தில் இருக்கின்றோம்.
உங்கள் ஏமாற்றத்தையும் விரக்தியையும் துயரத்தையும் பகிர்ந்துகொள்ளும் நிலையி;ல் உள்ள பலரின் அன்பை நீங்கள் உணரும் நிலையில் இருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
எங்கள் மதம்வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சகிப்புதன்மையை போதிக்கின்றது. இஸ்லாம் என்பது அமைதியின் மார்க்கம். தனியொருவரை கொலை செய்வது என்பது மனித குலத்தை கொலை செய்வதற்கு ஒப்பானது.
இவ்வாறான ஈவிரக்கமற்ற தன்மைக்கு எந்த இடமும் இல்லை என பத்திரிகையாளர் வஹாப் ஜட்எக்ஸ் பதிவிட்டுள்ளார்.