சீனாவிற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை ஊடுருவி தரவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஹேக்கர்கள் தங்களுடைய கையடக்கத் தொலைபேசிகளை அணுகி தரவுகளை திருடியதாக அரசாங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் நாற்பது பேர் ஏற்கனவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆன்லைன் கடன் வழங்கும் மையத்தில் சுமார் 80 இளம்பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆன்லைன் கடன் வழங்கும் நிலையம் 2021 ஆம் ஆண்டு இலங்கையர் ஒருவரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு சீன பிரஜைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது இதனை நடத்தி வரும் சீன பிரஜைகள் ஐவரும் இதனை ஆரம்பித்த இலங்கையரும் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.