எரிவாயுக் கப்பல்கள் இரண்டுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 2,800 மெட்ரிக் தொன் திரவ எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து எரிவாயு இறக்கும் பணி இன்று இரவு ஆரம்பிக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் நாளொன்றுக்கு 80,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேவேளை நாட்டில் மக்கள் எரிவாயு தட்டுப்பாட்டால் அவதிப்படும் நிலையில் லிட்ரோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.