ஐக்கிய இராச்சியத்தினால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியை மனிதாபிமான அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த மனிதானபிமான அடிப்படையிலான நிதியானது பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோருக்கு பகிர்ந்தளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.