இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 40,000 மெட்றிக் தொன் அரிசியின் ஒரு தொகுதி, இன்று இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
அதன்படி , நாட்டரிசியை 110 ரூபாய்க்கும் சம்பா அரிசியை 130 ரூபாய்க்கும் சதொச மூலம் விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் ஹந்ரானி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு தேவையான பொருள்களை தட்டுபாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்