ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக்கிழமை 15ஆம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கப்பல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 200 பேர் பயணிக்கின்றனர். இந்தோ – பசிபிக் பகுதியில் ஆறு மாத காலப் பணியின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுக அழைப்பை மேற்கொண்டுள்ளது.
2021, ஆகஸ்ட்டில் தமது பயணத்தை ஆரம்பித்த போர்க்கப்பல் 2022 பெப்ரவரி இறுதியில் ஜெர்மனிக்குத் திரும்பவுள்ளது.
இதேவேளை இந்த கப்பல், முதன்முறையாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கடலில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.