வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் அமைந்துள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பின் போது ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி தொடர்பில் தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவு உறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

