நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்கள் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பிலான விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக உயர் பொலிஸ் உத்தியோகத்தரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான அறிக்கை, எதிர்வரும் நீதிமன்ற விசாரணைகளின் போது சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.