இறப்பர் பொருட்களின் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக இறப்பர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இறப்பர் அதிகளவில் பயிரிடப்படும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் இறப்பர் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதன் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இறப்பருக்கான தேவை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளதாக இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் மாதவ வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையால் 150 மெட்ரிக் தொன் இரப்பர் கையிருப்புக்கு மேல் விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.