இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
அதில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பிரதானமானவை அந்த வகையில் வட்டவளை – டெம்பல்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரையொன்றின் பிக்குவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த தாயாரின் சடலத்துடன், உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவரின் மகள் 14 நாட்கள் வீட்டில் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் மிரிஹானை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாலியல் தேவைக்காக சிறுவர்கள் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள், படுகொலைகள் என்பவையும் அடங்கும்.