உலகளாவிய நிலைமையால் தனியார் நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரப்பொதி ஒன்றின் விலையானது 10,000 ரூபாவை நெருங்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட இரசாயன உர தடைக்கான வர்த்தமானி அறிவிப்பினை மாற்றியமைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டார்.
600,000 ஹெக்டேர் நிலத்தில் நெற் செய்கைக்காக பயிரிடப்பட்டுள்ளதாகவும், எனினும் முழு பிரதேசத்திலும் களைக்கொல்லிகள் இல்லை.
மேலும் இத்தனை ஹெக்டர் நிலத்தில் உள்ள களைகளை அகற்ற விவசாயிகளுக்கு 31 மில்லியன் வேலை நாட்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இவை சாத்தியமா என்றும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.