நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றால், மரமொன்று முறிந்து விழுந்தில் லயக்குடியிருப்பின் இரண்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதன்போது வீடுகள் கடுமையாக சேதமடைந்த நிலையில், எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில், நல்லதண்ணி பொலிஸாரும், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.