நாடளாவிய ரீதியில் நேற்று (14) இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை ரத்தோட்ட வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் களுதேவல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூமலர்ந்தான் சந்தியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.