உதவி வழங்கியவர்கள்; திரு சிவகுமார் இராசையா குடும்பம் Germany
உதவி வழங்கிய இடம்: அம்பாறை அக்கரைப்பற்று
உதவியின் நோக்கம்: திரு சிவகுமார் இராசையா அவர்களின் 60வது பிறந்த நாள்
(700€)
29.08.2021 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மூத்த உறுப்பினர் திரு இராசையா சிவகுமார் அவர்களின் 60 வது பிறந்த நாளான இன்று காலத்தின் தேவை அறிந்து வயோதிபக்குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் 50 சாறி சாறம் போன்ற உடைகள் ஒவ்வொருவருக்கும் 2000 ரூபா பெறுமதியில் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் எமது பண்ணையின் வளர்ச்சிக்காகவும் இன்றைய கொடுப்பனவுக்காகவும் 700€ வினை எமது வங்கி இலக்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வகையில்
இன்று பிறந்த நாளினைக் கொண்டாடும் அன்புக்குரிய சிவகுமார் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய நவீன் அவர்களுக்கும் நன்றி