கம்பஹா – கணேமுல்லையில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (20-03-2024) கணேமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டியின் போது விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் பொலிஸ் அதிரடிப் படையின் பதில் தாக்குதலில் குறித்த நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.