முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சந்திப்பில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், பங்கேற்றிருந்தார். இதன்போது அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ள யோசனை திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள எரிசக்தி பிரச்சினை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளால் முன்வைக்கப்படவுள்ள யோசனை திட்டம் எதிர்வரும் 2ம் திகதி கையளிக்கப்படவுள்ளது.
அதில் டொலர், எரிபொருள், மின்சாரம் பிரச்சினைகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு என்பனவற்றுக்கான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகள் அந்த யோசனைத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது