இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டுள்ள 4,000 இரத்தினக்கல் சுரங்கத் தொழிலாளர்களுக்கு QR குறியீட்டின் கீழ் விரைவில் எரிபொருள் வழங்கபடவுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலைகள் ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
விசேட சந்திப்பு
இரத்தினபுரி சுரங்கத் தொழிலாளர்கள், இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்களுக்கு இடையில் இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஒத்துழைப்புடன் இரத்தினக்கல் தொழிற்துறைக்கு தேவையான எரிபொருளை QR குறியீட்டின் ஊடாக ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.