அக்குரஸ்ஸ உடுகாவ பிரதேசத்தில் இரண்டு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரஸ்ஸ வெலிகம பிரதான வீதியின் நேற்று திங்கட்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மாத்தறையிலிருந்து வெலிபிட்டிய நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியே விபத்துக்குள்ளானதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.