கொழும்பு – கண்டி வீதியின் மாவனல்லை அன்வாரம பிரதேசத்தில் இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வளைவு ஒன்றில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மற்றுமொரு அரச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே வந்த தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த 38 பேர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 05 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேகாலை மொலகொட பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.