அங்குருவாதொட்ட, உருதுதாவவில் இடம்பெற்ற இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் கணவனின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அப் பிரதேசத்தில் காணாமல் போன இளம் தாய் மற்றும் 11 மாதங்களேயான குழந்தையின் சடலங்கள் அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.