நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்த சில நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோவர்களைப் பெற்றுள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் விஜய் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணக்கை தொடர்ந்துள்ளார். தற்போது லியோ படத்தில் படுபிஸியாக நடித்து வருகின்றார்.
தளபதி விஜய் ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது instagram பக்கத்தில் இணைந்துள்ளார்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லியோ படத்தின் புகைப்படத்தினையே பதிவிட்டுள்ளார். மேலும் சில நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ளாராம்.
எனவே இனி விஜய் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் படங்களின் விவரத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாவில் அதிவேகமாக 1 மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற பிரபலங்களின் பட்டியலில் விஜய் 3வது இடத்தில் வந்துள்ளார். ஆம் முதல் இடத்தில் 43 நிமிடத்தில் BTSV-யும், இரண்டாவது இடத்தில் 59 நிமிடத்தில் ஏஞ்சலினா ஜுலியும், மூன்றாவதாக விஜய் 99 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோவர்களை பின்தொடர்கின்றார்கள்.