மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும் என்பதால் எதிர்பார்ப்புகள் குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத வகையில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும்.
ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முடிவு எடுப்பது நல்லது. அடுத்தவர்களின் சொல் கேட்டு நடக்க வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை பல எதிர்ப்புகளை தாண்டி எப்படியாவது சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியில் இருந்து வந்த வேலைகளும் சுலபமாக முடிவடைய கூடிய நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விவேகம் தேவை. ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமை தேவை. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். பெரிய நபர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் உயர கூடிய வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய உற்சாகம் காணப்படும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிவாகை சூட கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பணியில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. குடும்பத்தில் நீங்கள் காண்பிக்கும் அலட்சியம் உங்களுக்கு தேவையற்ற மன சுமையை ஏற்படுத்தும். பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் நெருக்கம் ஏற்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சல் மிகுந்த காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமான வரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பணியில் அக்கறை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு விஷயத்திலும் குழப்பமான சூழ்நிலையில் முடிவு எடுக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு முக்கிய முடிவும் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்தில் இருந்து பணம் வரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களில் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி வாகை கிடைக்கும். தொலை தூர இடங்களிலிருந்து வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும். ஒருசிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்குவதில் சாதக பலன் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கும். தெளிவான ஒரு முடிவை எடுக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை கூடும் என்பதால் கூடுதல் அக்கறை தேவை. பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் சொல்வதை கேட்டு செய்வது நல்லது. தடைப்பட்ட சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமுதாயத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறைவழிபாட்டின் மீது கவனம் செல்லும்.