மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்ள கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் அற்புத பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்களைப் பற்றிய புரிதல் மற்றவர்களுக்கு இன்னும் மேம்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு மதிப்பும், மரியாதையும் குடும்பத்தில் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வை தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மனவுளைச்சல் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது உத்தமம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அவர்களிடத்தில் நன்மதிப்பு ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்துவந்த தேவையற்ற சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும் அற்புதமாக இருக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய பலம் அறிந்து செயல்பட கூடிய நாளாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற மனக் கசப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இணக்கமாக இருப்பது உத்தமம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் சிந்தனை கூர்மையாக கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை படம் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் உடல் சோர்வு காணப்படலாம். ஆரோக்கியம் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சாதித்து காட்ட கூடிய வல்லமை பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை வளரும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பற்றிய சில நுணுக்கங்களை கற்றுத் தேர்வதற்கு வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் மனசாட்சி படி செயல்படுவது நல்லது. வெளியிட போக்குவரத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம் என்பதால் சிக்கனத்தை கடைபிடிப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் போராடி வெல்ல கூடிய வாய்ப்புகள் உண்டு. சுப காரிய தடைகள் விலகும்.

