மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய ஆதரவு கிடைத்து வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்க கூடிய அற்புதமான நாளாக அமையும் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களுக்கு பெரியவர்களின் ஆலோசனை கேட்பது நல்லது. பழைய பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மற்றவர்கள் இடையூறாக இருக்கலாம்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய மனிதர்களுடைய அறிமுகங்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சலான முடிவுகள் எடுக்கும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சில் இனிமை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவருடன் ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறும் பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உங்களால் புதிய நம்பிக்கை கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடின முயற்சியால் முன்னேறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த வேலைகள் நினைத்தபடி முடியும். வருமானம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தெளிவான முடிவுகளை எடுக்கும் தைரியம் பிறக்கும். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சு வார்த்தைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வரவை விட செலவு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு எனவே ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதுரியமான நடவடிக்கைகளால் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகள் யாவும் தடையில்லாமல் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மற்றவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் உடைய ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை உதாசீனப்படுத்தாமல் அனுசரித்து செல்வது நல்லது
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுபவத்தில் சிறந்த விஷயங்களை உணர கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சில தந்திரங்களை கற்றுக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற நபர்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினரிடம் கூடுதல் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே நடந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதில் அதிரடி மாற்றங்கள் நிகழும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான வேலைகளை கூட சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி உறவு பிரச்சனைகள் தீரும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆவேசப்பட்டு யோசிப்பதை விட நின்று நிதானமாக செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் உயர் அதிகாரிகள் மூலம் அனுகூல பலன் பெறக் கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியீடு பயணங்களின் பொழுது கூடுதல் கவனம் தேவை. நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்திலிருந்து வரும் குழப்பங்கள் தீர கூடிய நாளாகவே இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மட்டும் கவனம் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகள் உங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.