மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ள நீங்கள் உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிள்ளைகள் மூலம் செய்திகளை பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவு எடுக்க கூடிய தன்னம்பிக்கை பிறக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களுக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்புகள் அமையும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை இல்லை.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை அடுத்தவர்களுடைய விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூல பலன் தரக்கூடிய வகையில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடமையில் கூடுதல் பொறுப்பு உணர்வு ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்றம் காண உங்களுடைய கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் புரியாத சில புதிர்களுக்கு விடை கிடைக்கும் அற்புத நாளாகவே இருக்கிறது. எது சரி எது தவறு என்கிற முடிவை எடுக்கும் தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அங்கு வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். தேவையற்ற கடன்களை வாங்குவதற்கு முன் பலமுறை யோசனை செய்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிலும் நின்று நிதானமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். இன்னல்களை தீர்க்க விநாயகர் வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கவலைகள் தீரும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. மனதில் இருந்து வந்த துயரங்களுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கூடுதல இணக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணைந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் பாரம் இறங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய யுக்திகள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேலையில் கவனம் தேவை. தேவையற்ற பணி சுமை காரணமாக டென்ஷன் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து ஒற்றுமை நிலவும். சகோதர சகோதரிகளுக்கு இடையில் இருந்து வந்த பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எத்தகைய தடைகளையும் தகர்த்து எறிந்து தொடர்ந்து முயற்சி செய்யும் விடாமுயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் இரட்டிப்பாகும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான தொலைதூர போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.