மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் உங்கள் பலவீனம் அறிந்து செயல்படுவது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படுத்திக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பது பூர்த்தியடைய கால தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் நன்மைகள் நடக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. எதையும் சாதுரியமாகப் பேசி உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்படலாம் என்பதால் பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். கணவன் மனைவி உறவில் அன்பு உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி அடைய கூடிய நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் முயற்சிகளில் சாதக பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதில் ஒரு புது உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் திறமையை அறிந்து செயல்படுவது நல்லது. முடியாத விஷயங்களை முடியாது என்று கூறி விடுவது உத்தமம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பண புழக்கம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நினைத்ததை விட இரட்டிப்பு லாபம் காணலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக தீர்வுக்கு வரும். அசையும் சொத்துக்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்த இடங்களிலிருந்து நினைத்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகளை அமைதியாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை அடையக்கூடிய யோகம் உண்டு.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை ஏற்படும். குடும்பத்தின் பொறுப்புகளை கூடுதலாக சுமக்க வேண்டி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல திருப்தி தரக்கூடிய லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கண்ட கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றியுள்ள எதிர்ப்புகள் அடங்க கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாண்டிய உத்வேகம் பிறக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஊக்கம் கொடுப்பார்கள். எதிலும் பொறுமையாக செயல்படுவது வெற்றியை தரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சோர்வு நீங்கி உற்சாகம் தரக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எவ்வளவு தடைகளையும் தாண்டி முன்னேற கூடிய நாளாக இருக்கும். தேவையான தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல பலன்கள் கிடைக்க இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாள் என்பதால் தடைபட்ட காரியங்கள் கூட நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறையான சிந்தனை மேலோங்கி காணப்படும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருப்பதால் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். புதிய பொருள் சேர்க்கை ஒரு சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தரும். ஆரோக்கியம் படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைகிறது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விரிவாக்கம் பற்றிய எண்ணம் மேலோங்கி காணப்படும். எதிர்பார்ப்பதை விட தேவைகள் எளிதாக பூர்த்தி அடையும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் சாதகப் பலன் உண்டு.