மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான பலன்கள் கிடைக்கும். ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்பதற்கு இணங்க இன்று நீங்கள் நடந்து கொண்டால் அதிர்ஷ்டம் உண்டு. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். ‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி பிரச்சனைகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். தடைப்பட்ட காரியம் ஒன்று இனிதே நிறைவேறும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடமையில் தளர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உத்தமம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். சுய தொழில் புரிபவர்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் தேவையற்ற பேச்சு வார்த்தையில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத ஒன்றை சந்திக்க வேண்டி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புதிய புரிதல் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாகக் கூடிய நாளாக இருக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை போராடி பெற வேண்டி இருக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை மேலும் வலுவாக்கும் என்பதால் விழிப்புணர்வு தேவை.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குறுக்கு வழியில் செல்லாமல் எதையும் நேர்மையாக கையாளுவது நல்லது. சுயதொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுபவ பாடம் கற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். வெளியிட பயணங்களின் பொழுது சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கிறது. மனதில் இருந்து வந்த கவலைகள் தீரும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கமாக செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டு. பெண்களிடம் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் காணப்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. புரியாத புதிர் ஒன்று அவிழ்க்கப்படும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கு முடிவு கிடைக்கும். முன்பின் அறியாதவர்கள் அறிமுகம் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கை சுத்தமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவார்கள். ஆரோக்கியம் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத வகையில் இருந்த பணம் வரவு சிறப்பாக இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். கணவன் மனைவியிடையே ஈகோ தவிர்ப்பது நல்லது. தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய வகையில் அமைப்பது நல்லது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.