மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களை கொடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை ஆற போடுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் ஏமாற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். எதிர்பாராத நபர்களின் சந்திப்பு உற்சாகத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகரித்து காணப்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்தமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு பல விமர்சனங்கள் எழும் என்பதால் ஆயத்தப்படுத்திக் கொள்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபம் பெருகப் போகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு நண்பர்களின் வழியில் அனுகூல பலன்கள் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு போராடுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம் எனவே பொறுமை காப்பது நல்லது. கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்பு உணர்ந்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே அடிக்கடி வாசுவாதங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உண்டு பொறுமை தேவை. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகள் தீர்க்கமானதாக இருக்க வேண்டும். செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று ரொம்பவும் சிந்திக்க வேண்டாம். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்க போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு எனவே கூடுதல் பொறுப்புணர்வு தேவை. ஆரோக்யம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளில் இருந்து வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவை. தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி நில்லுங்கள். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கோபத்தை அடக்கினால் நன்மைகள் உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதக பலன் உண்டு. பிள்ளைகள் கல்வி விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும் இதனால் டென்ஷன் இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு அனுசரணையாக இருப்பது நல்லது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியுடைய விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வு தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற கூடிய அற்புதமான வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. ஆரோக்கியம் மே்படும்.