மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுபவபூர்வமான சில விஷயங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகோதர சகோதரிகள் வழியே அனுகூலப் பலன்கள் உண்டாகும். பெண்களுக்கு எதிர்பார்க்கும் சில விஷயங்களில் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறையான சிந்தனை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுற்றி இருப்பவர்கள் சில குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது மூலம் நன்மைகளைப் பெறலாம். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுடைய ஒத்துழைப்பு கிடைத்து நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் தேவைப்படக் கூடிய நாளாக இருக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை தேவை. முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் ஆலோசனை கேட்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான கண்ணோட்டம் மாறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களிடம் பாராட்டுகள் பெறும் வாய்ப்புகள் அமையும். உங்களை நினைத்து பெருமைப் படக்கூடிய வகையில் நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்டநாள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விட்டு சென்ற சில உறவுகள் மீண்டும் வந்து இணையும் சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்து டென்ஷன் காணப்படும். ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிலிருக்கும் உளைச்சல் நீங்கும் அற்புதமாக இருக்கும். எது சரி எது தவறு என்கிற முடிவை சரியாக எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் தடையில்லாமல் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியில் இருந்து வந்த காரியங்கள் நிறைவேறும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கூடுமானவரை உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுப்பது நல்லது. திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைக்கும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். பெண்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் நடக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வெளியிட போக்குவரத்துகளில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்கள் திறமைகளை வெளிக்கொணர கூடிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் முயற்சிகள் வீணாகி போகாமல் வெற்றியை கொடுக்கும் அற்புத நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்து காணப்படும் இதனால் தலைவலி மற்றும் டென்சன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். எதையும் நின்று நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை நிதானத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். ஆரோக்கியத்தை கவனிப்பது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக்கூடிய இனிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நட்பு வட்டம் விரியும். பெண்கள் குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருக்கும் குழப்பங்கள் நீங்கி அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.