மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய அற்புதமான நாள் என்பதால் முக்கிய முடிவுகளை தாராளமாக எடுக்கலாம். கணவன் மனைவி ஒற்றுமையில் ஏற்றம் காணப்படும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பல இடங்களில் இருந்தும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தர கூடிய அமைப்பு என்பதால் நீங்கள் தடைபட்ட காரியங்களை மீண்டும் முயற்சி செய்து முடிக்கலாம். விட்டு சென்ற உறவுகள் வந்தடைய வாய்ப்புகள் அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்க கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேலை சுலபமாக முடியும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குதூகலம் காணப்படும். சிலரது சந்திப்புகள் உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் அனுகூல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுடைய கருத்துகளையும் கேட்டு முடிவு எடுப்பது நல்லது. ஆரோக்கியம் கவனம் தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்ததை அடைவதற்கு சற்று பொறுமை காப்பது அவசியமாகும். கணவன் மனைவி உறவுக்கு இடையே மன இறுக்கம், சிக்கல்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கப் போகிறது. சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மை உண்டாகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாதகமாற்ற அமைப்பு என்பதால் பொறுமை அவசியம் தேவை. வம்பு வழக்குகள் தேவையில்லாமல் தேடி வரும் என்பதால் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் உங்கள் திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடையும் வாய்ப்புகள் உண்டு. மனதில் நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளத் துணிவீர்கள். சுய தொழிலில் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமக்க வேண்டி இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை மதித்து நடப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை காண இருக்கிறீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை வலு அதிகரிப்பதற்கு உண்டு என்பதால் சுறுசுறுப்பு தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறை வழிபாட்டின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் மற்றவர்களின் கருத்துக்கும் முன்னுரிமை கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் பொறுப்புணர்வு தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு உங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வேகத்தை விட விவேகம் தேவை. வாடிக்கையாளர்களின் மனம் கவர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை தொடர்பான பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும்.